தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்றும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளனர் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
தகுதி நீக்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு இல்லை என்பதில் மாற்றம் இல்லை என்று கூறினார் டி.டி.வி தினகரன்!
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறப் பட்ட நிலையில், தங்களது முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளனர் டிடிவி தினகரன் தரப்பினர். அவ்வாறு மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்கிற முடிவில் மாற்றம் இல்லை என்று அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது!
இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், இடைத்தேர்தல் நடந்தால் 20 தொகுதிகளிலும் அமமுக வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.