அறநிலையத் துறை ஆலயங்களின் சொத்து விவரத்தை இணைய தளத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை வரவேற்றுள்ள பாஜக. தேசிய செயலர் ஹெச்.ராஜா, இது தங்களது கோரிக்கைகளுக்குக் கிடைத்த முதல் வெற்றி என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அறநிலையத்துறை இந்து கோவில்கள் சொத்துக்களின் விவரங்கள் அறநிலையத்துறை இணையத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. குத்தகைதார்கள் பெயர், குத்தகை பாக்கி ஆகிய விவரங்களும், ஆக்கிரமிப்பாளர்கள் பெயர் ஆகியவற்றையும் வெளியிட உத்தரவு. நம் கோரிக்கையின் முதல் வெற்றி… என்று குறிப்பிட்டுள்ளார்.
அறநிலையத்துறை இந்து கோவில்கள் சொத்துக்களின் விவரங்கள் அறநிலையத்துறை இனையத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. குத்தகைதார்கள் பெயர், குத்தகை பாக்கி ஆகிய விவரங்களும், ஆக்கிரமிப்பாளர்கள் பெயர் ஆகியவற்றையும் வெளியிட உத்தரவு. நம் கோரிக்கையின் முதல் வெற்றி. pic.twitter.com/omqVxk0waw
— H Raja (@HRajaBJP) October 31, 2018
முன்னர் இதே போல் அறநிலையத்துறை ஆலய சொத்துகளை நெடுங்கால குத்தகைகளுக்குப் பெற்றவர்கள், குத்தகைகளை செலுத்தாமல் பாக்கிவைத்திருப்பதும், உள்வாடகைக்கு விடுவதுமான முறைகேடுகளில் ஈடுபட்டிருந்த போது, கோயில்களில் குத்தகை பாக்கிதாரர்கள் குறித்து எழுதி வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு வந்தது. ஆலயங்களில் மண்டப வெளியில் பட்டும் படாமலும் சிலரின் பெயர்களை எழுதி வைத்தார்கள். ஆனால் அவற்றால் எல்லாம் குத்தகை பாக்கி வசூலானதாகத் தெரியவில்லை.
குத்தகை பாக்கி வைத்திருப்பவர் தங்களது பெயர் வெளித் தெரிந்தால், அதற்காக வெட்கப்பட்டு வேதனைப்பட்டு கேவலப்பட்டு, நாணத்தால் கூசிக் குறுகி நின்றதெல்லாம் அந்தக் காலம். இப்போதோ காலரை தூக்கி விட்டுக் கொண்டு, கெத்தாகத் திரிகிறார்கள். இந்த நிலையில், வெறுமனே குத்தகை விவரம், பாக்கி, வசூல் விவரம் இவை எல்லாம் இணையதளங்களில் வெளியிடுவதால் மட்டும் பலன் விளைந்துவிடாது என்றும், வசூல் செய்வதில் கறார் காட்டுவதால் மட்டுமே ஆலய சொத்துகள் பாதுகாக்கப் படும் என்றும் கூறுகின்றனர் ஆலய பாதுகாப்பு குறித்து பேசுபவர்கள்!