வடகொரியாவுக்கு அரிய பழங்களை அனுப்புகிறது தென்கொரியா

10 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக தங்கள் நாட்டில் இருந்து உணவு பொருட்களை வட கொரியாவுக்கு அனுப்ப தென்கொரியா முடிவு செய்துள்ளது. கிச்சிலி பழ வகையை சேர்ந்த இந்த பழங்களில் சுமார் 20 ஆயிரம் பெட்டிகளை வடகொரியாவுக்கு தென்கொரியா பரிசாக அளிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே வடகொரியாவில் இருந்து சுமார் 2 டன் அளவுக்கு விலை உயர்ந்த பைன் காளான்களை தென்கொரியாவுக்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.