பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து #மீடூ என்ற ஹேஷ்டேக் மூலம் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததுடன், பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டு பேசினார்.
இதுகுறித்து அண்மையில் இயக்குனர் அமீர் பேசிய போது, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றவர்கள் மீடூவில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்ததுபோல், இதே பிரச்னையில் சிக்கி உயிரிழந்த சிறுமி ராஜலட்சுமிக்கு ஆதரவு தரும் வகையில் ஏன் குரல் கொடுக்கவில்லை; இங்கும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பெண்ணுக்கு நிகழும் கொடுமைகள் குறித்துப் பேச யாரும் முன்வருவதில்லை! இதிலும் சாதி பார்க்கப்படுகிறது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இயக்குநர் அமீரின் கருத்துக்கு, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “சமீபத்தில் சகோதரர் அமீர் பேசியதை கேட்டேன். என்னைக் குறிப்பிட்டு சில வார்த்தைகள் விட்டிருக்கிறார். எனது தந்தை மறைந்து போன தருணத்தில் , பகையூட்டும் சாதி வன்மம் கொண்ட சகோதரர் அமீர் பேசிய வார்த்தைகள்தான் மிகவும் வேதனை அளிக்கிறது.
அவர் இப்பொழுது தொடுத்த சாதி விஷமார்ந்த அம்பு, ஒருநாள் அவரை நோக்கியும் பாயலாம். கை தட்டல் வாங்குவதற்காக இந்த சமுதாயத்தை எரித்துக் கொண்டிருக்கும் சாதி என்னும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம்.
பாதிக்கப்பட்டவர்கள் சாதியை பார்த்து நான் குரல் கொடுப்பது இல்லை. என் மீது குற்றம்சாட்டும் சகோதரர்களே, உங்கள் முகத்திலிருந்து சாதி சாயம் பூசிய கண்ணாடியை நீக்கிவிட்டு பாருங்கள். பல ராஜலட்சுமிகளுக்காகவும், நந்தினிகளுக்காகவும் நான் துடித்து போனதும், குரல் கொடுத்ததும் உங்கள் கண்ணுக்கு தெரியும்.
மூன்று வருடங்களுக்கு முன்னால் பத்து பெண்களுக்கு பெண்கள் தினத்தன்று பாஜக அலுவலகத்தில் ஒரு விருது வழங்கப்பட்டது. அந்த புகைப்படத்தை இப்பொழுது இணையத்தில் உலவவிட்டு தவறாக சித்தரித்து இருக்கிறார்கள். அதேபோல் என்னுடைய மீ டூ ஸ்டோரியை சகோதரர் அமீர் அவர்கள் தவறாக சித்தரித்து இருக்கிறார்கள்.
அதேபோல், என்னுடைய மீ டூ ஸ்டோரியை சகோதரர் அமீர் அவர்கள் தவறாக சித்தரித்து பரப்பிக்கொண்டு இருக்கிறார்.
என் தந்தையார் எனக்கு ஜாதி வெறி ஊட்டி வளர்க்கவில்லை. ராஜாஜி அவர்களையும், பெரியார் அவர்களையும் ஒரே மாதிரி நேசித்து, அவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை எல்லாம் தாண்டி இருவரிடமும் இருக்கும் நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு வாழ்ந்த தந்தைக்கு பிறந்த மகள் நான். அவர் வகுத்த பாதையில்தான் என்றும் பயணிப்பேன்” என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, சாதி பார்த்து கட்டம் கட்டிப் பேசும் மதவெறி பிடித்த அமீரை சகோதரர் என்று அழைக்கும் அளவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பக்குவம் வந்திருக்கிறதா அல்லது, சகோதரர் என்று அழைப்பதன் உண்மைப் பொருளை விளங்காமல் இவர் குறிப்பிடுகிறாரா என்று சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் தலை எடுத்துள்ளன.
மீ டூ விவகாரம் சில நாட்களாக அமைதியாக இருந்த நிலையில், மதவெறி அமீர் மூலம் மீண்டும் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
To my friends in press & media ?, here is my statement against Director Ameer’s hate speech… pic.twitter.com/RT941D7q1f
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) November 11, 2018