சமீபத்தில் நடந்த RSS அகில பாரத கூட்டத்தில் இந்த ஆண்டு காலமான முக்கிய பிரமுகர்கள் அரசியல் பிரமுகர்களுக்கு அஞ்சலி செலுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதன்படி முதுபெரும் அரசியல் தலைவரும் தமிழகத்தை சேர்ந்தவருமான #கருணாநிதிக்கும் இரங்கற்பா தெரிவிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சார்பில் மும்பையில் நடைபெற்ற அகில இந்திய கூட்டத்தில், மறைந்த திமுக., தலைவர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தப் பட்டது. கூட்டத்தில் இரண்டு நிமிடம் மௌனம் அனுசரிக்கப் பட்டு, இரங்கல் தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது.
இந்தத் தீர்மானத்தை தமிழ்நாடு மாநில ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வழங்கினர்.
நவ.12 இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் டாக்டர் கே.குமாரசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் சாம்பமூர்த்தி, மாநில அமைப்பாளர் பூ.மு. ரவிக்குமார் ஆகியோர் நேரில் சென்று வழங்கினர்.
இதனை திமுக., தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தது.
‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் மும்பையில் நடைபெற்ற ‘அகில பாரத காரியகாரி மண்டல்’ கூட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேறியது’
கழக தலைவர் அவர்களை, மாநில ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் நேரில் சந்தித்து தீர்மான நகலை வழங்கினர். pic.twitter.com/7t5eXAxRW9
— DMK – Dravida Munnetra Kazhagam (@arivalayam) November 12, 2018
Vote alone stands before politicians. Policy shines only after election.