கஜா புயலின் வேகம் சற்று குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல், காலை நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புயலின் வேகம் மேலும் குறைந்தால் கரையைக் கடக்க தாமதமாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை மாவட்டத்திற்கு கிழக்கு மற்றும் வடக்கில் 840 கி.மீ. தூரத்தில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது.