தண்டனை பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவராக சிறப்பு அதிகாரி அந்தஸ்துடன் பொன்.மாணிக்கவேலுக்கு மேலும் ஒரு ஆண்டுக்காலம் பணி நீட்டிப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அரசியல் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்த போது, சிலைக்கடத்தல் விசாரணை சிறப்பு அதிகாரியாக மீண்டும் உயர்நீதிமன்றத்தால் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கும் ஐஜி பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இன்னும் சிறப்பாக செயல்பட்டு சிலை கடத்தல் வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையும் உள்ளது. என்று குறிப்பிட்டுள்ளார்.


ஐ.ஜி பொன்மணிக்கவேலின் பணி ஒர் ஆண்டு நீட்டிக்கபட்டிருப்பதை வரவேற்கிறேன். இது தான் எங்களுடைய எண்ணமும் கூட என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.