13 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம்: ஆட்டோ ஓட்டுநர் உள்பட 3 பேர் கைது!

20181212 073423 COLLAGE

ஆம்பூரில் ஆறாம் வகுப்பு பள்ளி மாணவியை காரில் கடத்திச் சென்று பெங்களூரு மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட 3 பேர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேர் தலைமறைவாகினர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் வாத்தி மனை பகுதியை சேர்ந்த பைரோஸ் அகமதுவின் 13 வயது மகள் அதே பகுதியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

வழக்கமாக ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற மாணவியை ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் பள்ளிக்கு அருகே இருந்து காரில் கடத்திக் கொண்டு பெங்களூர் சென்றனர்.

அங்கே அந்த சிறுமியை தனியார் விடுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த வழக்கில் அப்பான் அகமது, அமீன் என்கின்ற இர்பான் கான், முதாசீர், ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள தப்ரேஸ் மற்றும் ஷேபாஸ் ஆகிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.