செந்தில்பாலாஜி போன்றவர்களை இழுத்து விழா நடத்தும் அளவுக்கு திமுக., பலமாக இருக்கிறது! என்று டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

அமமுகவில் இருந்து திமுக.,வுக்கு சென்றிருக்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இது குறித்து இன்று செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன் கூறியவை…

2006 இல் செந்தில்பாலாஜியை நான்தான் பரிந்துரை செய்தேன். 4 மாதங்களுக்கு முன்பு என்னிடம் வந்து சொந்த காரணங்களுக்காக கட்சி பணியில் ஈடுபடுவதை குறைத்துள்ளேன் என்றவர் திமுகவிற்கு போய்விட்டார்.

யாரையும் பிடித்து வைக்க முடியாது. கட்சியில் இருப்பதும், செல்வதும் அவரவர் சுயவிருப்பம். எங்கிருந்தாலும் வாழ்க என செந்தில்பாலாஜிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து.

செந்தில் பாலாஜி சென்றது எனக்கு வருத்தமில்லை. கரூர் மாவட்டத்தில் அமமுக உறுப்பினர் சேர்க்கை தொடர்பான வடிவங்கள் வந்து சேரவில்லை என்பதுதான் எனக்கு வருத்தம்.

இது போன்ற நபர்களை கட்சியிலிருந்து இழுத்து, அதை ஒரு விழாவாக நடத்தும் அளவிற்கு திமுக எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...