ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடைக்கு மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நடிகை நக்மா வரவேற்பு !

ஜல்லிக்கட்டை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தடை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர். வி. ரமணா அமர்வு ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளனர். இதனையடுத்து ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

 

மேலும் ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில்,அரசு அலுவலகங்கள் மீது கல்வீசி தாக்குதல், பேருந்துகள் கண்ணாடி உடைப்பு. கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் போன்றச ம்பவங்கள் நடைபெற துவங்கியுள்ளன.

 

இந்த நிலையில் ‘காதலன்’ உள்பட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்த பிரபல திரைப் பட நடிகையும் தேசிய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான நக்மா ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்ததை வரவேற்றுள்ளார். 

 

நடிகை நக்மா கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டு காங்கிரஸ் கூட்டனி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேசி தேர்தல் பிரசாரம் செய்தது குறிப்பிடதக்கது.