இல்லன்னு சொல்லல இருந்தா நல்லாருக்கும்னு சொன்னேன்… என்று கமல் ஹாசன் கடவுளைக் குறித்த கருத்தைத் தெரிவித்தது போல், ராகுல் காந்தி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

கணிதம் பயில்பவர்கள் மிகவும் அடிப்படையான ஃபார்முலாவான a2+b2=c2 என்ற செவ்வக முக்கோண தேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு சொல்வது போல் ஒரு நகைச்சுவை, ராகுலைக் குறித்து இணையதளங்களில் உலாவருகிறது.

ராகுல் காந்தி… வகுப்பு 7 சி

கேள்வி: இந்த படத்தில் உள்ள செவ்வகத்தின் அடிப்படையில் இதனை நிருவுக..

பதில்: இதில் என்னிடம் இதுவரையிலும் எந்த நிரூபணமும் இல்லை ஆனாலும், நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்… இது இதுதான்!

காரணம்… அண்மைக் காலமாக ரபேல் விவகாரம் ராகுல் காந்தியை ரஃபேல் காந்தி ஆக்கியிருக்கிறது.

தூக்கத்தில் கூட ரஃபேல் ரஃபேல் என்று உளறக் கூடிய தன்மைக்கு அவர் வந்திருப்பதாக கேலியும் கிண்டல்களும் இணையத்தில் தூள் பறக்கின்றன.

இந்நிலையில், இந்த கேலியும் அதில் சேர்ந்துள்ளது. ஒரு சாதாரண இடைநிலை வகுப்புக் கூட முடிக்காத மாணவனைவிட மோசமாக ராகுல் பேசுவதை இப்படி கிண்டல் செய்து வருகிறார்கள் இணையத்தில்.

என்னிடம் ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் கிடையாது. ஆனால், நான் இதில் ஊழல் நடந்திருக்கிறது என்பதில் உறுதியாக உள்ளேன்… – என்று ராகுல் சிறுபிள்ளைத்தனமாகக் கூறியதைக் கேட்டு, மேற்படி கேலியும் கிண்டலும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...