spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?சனாதனமா? சனநாயகமா? அண்ணன் திருமா.,வுக்கு தம்பி ரவிக்குமார் எழுதுவது...!

சனாதனமா? சனநாயகமா? அண்ணன் திருமா.,வுக்கு தம்பி ரவிக்குமார் எழுதுவது…!

- Advertisement -

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா அண்ணன்
அவர்களுக்கு ……

திருச்சியில் நடைபெற்ற சனாதனமா? சனநாயகமா? மாநாட்டில் தாங்கள் பேசிய “சம்பூகன் வதம் ” – குறித்து உங்களிடம் சொல்ல விரும்புவது இதைத்தான்…

சூத்திரன் சம்பூகனை ஸ்ரீராமர் வதம் செய்தது சரியா.? ரிக் வேதத்தில் சுதாஸ் என்னும் அரசன் வசிஷ்டரது உதவியால் சுதாஸ் ’பேதம்’ என்பவனை ஒழித்தான் என்றும் ரிக் வேதம் கூறுகிறது (7-83).

நாமும் ஐம்புலன்களையும் அடக்கிக் கொள்ளவேண்டும். ஐம்புலன்களும் ஐந்து எதிரிகள் போன்றவர்கள். இந்த ஐந்து எதிரிகளை அடக்கவில்லை என்றால், சங்கிலித் தொடர் போல மேலும் ஐந்து எதிரிகள் உண்டாவார்கள். ஆக மொத்தம் பத்து எதிரிகள் ஒரு மனிதனுக்கு உண்டு. கீதை 2- 62 &63

பத்து அரசர்கள் என்னும் எதிரிகளை குருவான வசிஷ்டர் துணையுடன், இந்திரன் அருளுடன், சுதாஸ் வெற்றி கொண்டான்.

அந்த சுதாஸுக்குப் பட்டாபிஷேகம் செய்தவர் வசிஷ்டர் என்று மஹாபாரதத்தில் சொல்லப்படுகிறது. அதே சுதாஸை சூத்திரன் என்றும் மஹாபாரதம் அழைக்கிறது.

பிரம்ம ஞானம் பெற ஆசைகளை அடக்க வேண்டும். மேற்கூறிய பத்து அரசர்களை சுதாஸ் அடக்கியது போல அடக்க வேண்டும்.

அப்படி அடக்காமல் பிரம்ம ஞானத்தைத் தேடி தவம் புரிந்தவன் சம்பூகன். சம்பூகன் என்பவன் எல்லா பௌதீக ஆசைகளை அடைவதற்காக தவம் செய்தான். அதாவது வேத சாஸ்திரதிற்கு எதிர்மாறாக குரு இல்லாமலும், சாஸ்திரம் கூறும் வேத சடங்களுக்கு எதிராகவும் தன்னிச்சையாக முரட்டுதனமான தவம் செய்தான்.

அதனால் ராமனுடைய ஆட்சியில் அதன் பின்விளைவாக ஒரு நல்ல, இதுவரையும் பொய்யோ,பிறரை துன்புறுத்தாமலும் வாழ்ந்த பிராமணரின் மகன் எந்தவித காரணமும் இல்லாமல் சும்மா இறக்கிறான்.

எனவே இதன் காரணம் என்ன என்று ராமன் கேட்க. நாரதர் கூறூகிறார் ‘சம்பூகனின் சாஸ்திர விதிகளுககு எதிராக செய்யும் தவமே’.என்கிறார்.. அதைச் சொல்லி அவனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொன்னவர் நாரத முனிவர்.

அவரது பூர்வீகம் என்று பார்த்தால் அவர் ஒரு பணிப்பெண்ணுக்குப் பிறந்தவர். அதனால் இங்கு சூத்திர நிந்தை செய்தவர் என்று எந்த பிராமணனையும் சொல்ல இடமில்லை. சம்பூகன் செய்தது தவறு என்று சொன்னது ஒரு பணிப்பெண்ணின் மகன்.

அதற்குத் தண்டனை கொடுத்தது ஒரு க்ஷத்திரிய அரசன்! ஸ்ரீ ராமர் பிராம்மணன் இல்லை. அவர் க்ஷத்திரிய குல அரசன். க்ஷத்திரியன் என்றால், க்ஷத்தைப் போக்கிக் காப்பாற்றுபவன் என்பது பொருள்.

ஸ்ரீராமரது ஆட்சியில் நான்கு வர்ணத்தவர்களும் திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் இருந்தனர் என்று ராமாயணம் கூறுகிறது. மேலும் ராமர் சூத்திரர்களுக்கு எதிரி என்றால், அவர் வேடனான குகனைக் கட்டித் தழுவி ‘குகனோடு ஐவரானோம்’ என்று எப்படிச் சொல்லியிருக்க முடியும்?

அது போல சூத்திரபெண் சபரி என்பவள் கடித்து எச்சில்பட்ட பழங்களை ராமர் விரும்பி உண்டது எவ்வாறு? ராமர் சூத்திரர்களை அழிப்பவராக இருந்தால், வால்மீகி எப்படி ராமாயணத்தை எழுதியிருக்க முடியும்?

வால்மீகி வழிப்பறிக் கொள்ளை செய்து வந்தவர். பிறகு தவம் செய்து முனிவரானவர். அவரது ஆசிரமத்தில்தான் ராமனது பிள்ளைகள் பிறந்தனர். அவரிடம்தான் சீதை அடைக்கலம் கொண்டிருந்தாள். திருடனான வால்மீகி ஒரு தபஸ்வியானது எவ்வாறு?

ஒரு சம்பூகன் தவம் செய்ததை ராமர் தடுத்தார் என்றால், திருடனான வால்மீகி ஒரு தவ ஞானியானதை ராமர் ஏன் தடுக்க வில்லை? வால்மீகிக்கு ஒரு நீதி? சம்பூகனுக்கு ஒரு நீதியா?

இன்றைக்கும் ராமாயணம் பாராயணம் செய்யும் போது முதலில் வால்மீகியை வணங்கிவிட்டே தொடங்குவர்.

“ வந்தே வால்மீகி கோகிலம்” – மதுரமான மொழியால் ராம காவியம் பாடிய வால்மீகி என்னும் குயிலுக்கு நமஸ்காரம் – என்று ஒரு காலத்தில் திருடனாக இருந்தவனுக்கு இன்றுவரை மரியாதை கொடுக்கப்படுகிறது.

நாரதரே தன்னிடம் வழிப்பறி செய்ய முயன்ற ரத்னாகரனுக்கு (வால்மீயின் ஆரம்ப காலப் பெயர்), புத்திமதி சொல்லி, அவனைத் தவம் செய்ய ஊக்குவித்தார். வால்மீகி தவம் செய்து முனிவரான பின்னும், ராம கதையை அவருக்குச் சொன்னது நாரதரே.

சம்பூகன் ஒரு வேடன். அவனைச் சூத்திரன் என்று சொல்லி, அதனால் அவன் தவம் செய்வது தவறு என்று சொன்ன நாரதரே, திருட்டுத் தொழிலில் ஈடுபட்டிருந்த ரத்னாகரனை (வால்மீகியை) தவம் செய்யும் படி தூண்டியிருப்பதால், சம்பூகன் தவம் செய்யக்கூடாது என்று தடுத்திருப்பதற்கு வேறு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று தெரிகிறது. சூத்திரன் என்பது காரணமாக இருக்க முடியாது.

அவன் பௌதீக சுகங்களை உடனே பெறவும்,, அதுவும் குரு இல்லாமலும, சாஸ்திரத்திற்க்கு விதிகளை கடைபிடிக்காமல் செய்தது தான் காரணம். மேலும் வால்மீகி தவம் புரிந்து முனிவரானதும், சம்பூகன் வாழ்ந்த சமகாலத்திலேயே நடந்திருக்கிறது. எனவே ஒருவன் சூத்திரன் என்று இன்று நாம் நினைக்கும் ஜாதி காரணமாக ராமர் சம்பூகனை வதைக்கவில்லை.

  • ராம. ரவிக்குமார் ( மாநில பொது செயலாளர் இந்து மக்கள் கட்சி தமிழகம் )

1 COMMENT

  1. இந்த விளக்கமெல்லாம் அவருக்குப் புரியாது. காரணம், பிடிக்காது. அப்புறம் என்ன செய்வது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe