spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாமுகேஷ் அம்பானி – மு.க.ஸ்டாலின் ‘திடீர்’ சந்திப்பு!

முகேஷ் அம்பானி – மு.க.ஸ்டாலின் ‘திடீர்’ சந்திப்பு!

- Advertisement -

அம்பானியின் நிறுவனங்களுக்கு பாஜக அரசு பல  சலுகைகளை செய்து தருவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வைத்துள்ளது.

அம்பானி குழுமங்கள் குறித்து திமுகவும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இந்தநிலையில் இன்று முகேஷ் அம்பானியும் மனைவி நீட்டா அம்பானியும் சென்னையில் திமுக  தலைவர்  மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

முகேஷ் அம்பானி தனது மகனின் திருமண அழைப்பிதழை ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோரிடம்  வழங்கினார். திருமணம் வருகிற மார்ச் 9 ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.

ஆகாஷ் அம்பானி – ஷோல்கா மேத்தா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. பள்ளி காலத்தில் இருந்தே பழகி வந்த இருவரும் தற்போது திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். தொழிலதிபர் ரசல் மேத்தா மற்றும் மோனா மேத்தா ஆகியோரின் மகள் தான் ஷோல்கா மேதா.

கடந்த டிசம்பர் மாதம் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமண விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இஷா அம்பானிக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் அஜே பிரமால் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் திருமணம் நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe