மதமாற்றப் புகாரில் முதல் முறையாக வழக்கு பதிவு! பெண் மேற்கொண்ட அரிய முயற்சி!

Santhome Basilica Chennai
ID:7318843

கோவை சாமிசெட்டிப்பாளையம் பகுதியில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரின் மகள் பவித்ரா கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரில், நான் கடந்த 8 ஆம் தேதி தனியாக வீட்டில் இருந்தபோது அங்கு வந்த திவ்யா என்ற பெண் என் கையில் பைபிள் ஒன்றைக் கொடுத்து தான் எகோவா சாட்சி என்றும், கடவுளைப் பற்றி சொல்ல வந்ததாகவும் தங்களுடைய கடவுள் தான் உண்மையானவர் என்றும், இந்து மதத்தில் நீங்கள் வழிபடுவது கடவுள்கள் அல்ல அனைத்தும் சாத்தான்கள் என்றும் கூறினார்,

மேலும் எங்கள் கடவுளைத்தான் இனி நீங்கள் வழிபட வேண்டும் என்றும் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். அத்துடன், இந்துக் கடவுள்களை தொடர்ந்து இழிவாகப் பேசினார் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.

திவ்யாவின் செயலால் கோபமுற்ற பவித்ரா, திவ்யா மீது பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததும், அந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் முதல் முறையாக மதமாற்றத்திற்கு எதிராக CSR வழக்கு பதிவு செய்துள்ளதும் தான் தற்போதைய ஆச்சரியகரமான செய்தியாக வெளியாகியுள்ளது..

இந்தியாவின் முதல் CSR வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக இந்தச் செய்தி, சிஎஸ்.ஆர் காபி உடன் இப்போது வைரலாகி வருகிறது.

petion against convertion
Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.