காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் இன்னுயிர் இழந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரும் ஒருவர்.

அவருக்காகக் கண்ணீர் வடித்து, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லும் வகையில் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் எழுதிய கவிதாஞ்சலி இது…

நீ வீரன் என்று தெரிந்தே வாக்கப்பட்டாள் கற்புக்கரசி

நீ வாழ்வாய் என்று நினைத்துதான் உன் தாலியை சுமந்தாள் அந்த சுமங்கலி

நீ போர்க்குடியில் பிறந்தவன் அதனால் உனக்கு போர்க்களம் புதிதல்ல

நீ மறத்திக்கு பிறந்தவன் அதனால் உனக்கு மரணம் இல்லை

தேசம் காப்பது நமது தொழில் என்றாலும் வீட்டைக் காப்பதும் நம் கடமை அல்லவா

உன் தாயும் தந்தையும் அழுவார்கள் என்று நினைத்த வேளையில்

தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவனும் அழுகிறானே உன்னை நினைத்து

நீயல்லவா வீரன் நீயல்லவா தர்மன்!

ஏற்றுக்கொண்ட வாழ்க்கையை இறுதி வரை உன்னோடு பயணிக்க முடியாமல்

இடை முறிந்து போன என் சகோதரியின் கண்ணீரைப் பார்க்கும்போது

என் உடன் பிறந்த தங்கை தவிப்பதுபோல்

ஒரு வகையான பதட்டமும் மரண ஓலமும் என்னை சித்ரவதை செய்கிறது

நீ திரும்பி வருவதில்லை

ஆனால் உன்னைச் சிதைத்த அந்த வெறி பிடித்த நாய்களை

கொன்று குவிக்க வேண்டும் என்ற வேட்கை எனக்குள் இருக்கிறது

அதை இந்திய அரசாங்கம் செய்ய வேண்டும்

அருமை சகோதரன் சுப்பிரமணியனுடைய ஆன்மா

எல்லாம் வல்ல இறைவன் நிழலில் இளைப்பாற

இறைவனை பிரார்த்திக்கிறேன்

– கால்வாய் சிவா

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...