புது தில்லி:
தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த போராட்டம், ஹைதராபாத் மாணவர் தற்கொலை விவகாரம் ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பின. அதற்கு பதிலளித்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து வெளுத்து வாங்கினார். அதற்கு பதிலளிக்க இயலாமல் எதிர்க்கட்சியினர் வெலவெலத்துப் போயினர்.
அவரது பேச்சில் இருந்து….
தெலங்கானாவில் தனி மாநிலம் கேட்டுப் போராடி, எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். சுமார் 600 மாணவர்கள் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இறந்துபோயினர். பேருக்காவது ஒரு தடவைகூட, எந்தக் கல்லூரிக்காவது சென்று இந்த ராகுல் காந்தி மாணவர்களை சந்தித்தது உண்டா?
ஆனால் ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு இரண்டு முறை போய் விடிய விடிய துக்கம் விசாரித்த ராகுலின் நோக்கம் அரசியல் இல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்?
ரோஹித் வெமுலாவையும் பிற மாணவர்களையும் இடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்த நிர்வாகக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கபட்டவர்களே.
நாங்கள் கல்லூரி நிர்வாகத்தில் எந்தத் தலையீடும் செய்ததில்லை…
அந்த மாணவனின் உயிரைக் காப்பாற்ற ஏன் எந்த மருத்துவரையும் அவர்கள் உடனடியாக அழைக்கவில்லை? அந்த மாணவன் தூக்கில் தொங்கியதாகச் சொல்லப்படும் அன்று, மாலையில் இருந்து மறுநாள் காலை போலீஸார் வரும் வரை இவர்கள் விடுதியில் இருந்து அந்த மாணவனைத் தூக்கிக் கொண்டு எந்த மருத்துவமனைக்கும் செல்லவில்லையே ஏன்?
துர்கா பூஜை அன்று நாடு போற்றும் தெய்வம், துர்காதேவியை தரக்குறைவாக விமர்சித்தும், மகிஷாசுரனை வாழ்த்தியும் ஜேஎன்யூ மாணவர் கூட்டம் போட்ட கோஷங்களை கொல்கத்தா தெருக்களில் வைத்து விவாதிக்க ராகுல் தயாரா?
யாகூப் மேமனுக்கு தூக்குத் தண்டனை விதித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, ஒரு இந்து பாசிஸ்ட், அப்சல்குருவை தூக்கிலிட வைத்த குடியரசுத் தலைவரை
விமர்சித்து ஒட்டிய போஸ்டர்களை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
ரோஹித் வெமுலாவின் தற்கொலையை காங்கிரசும், JNU மாணவர்கள் விவகாரத்தை கம்யூனிஸ்டுகளும், தங்களது அரசியல் லாபத்திற்காகவே பயன்படுத்துகின்றன.
என் பெயர் ஸ்மிரிதி இரானி. என் சாதியை யாராவது சொல்ல முடியுமா? சாதியை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை. கல்லூரிகள் விவகாரத்தில் நான் என் கடமையைதான் செய்தேன். யாரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.
இந்த தேசத்திற்காகவே வாழ்வேன். இந்த தேசத்திற்காக சாவேன். கங்கைநீரில் என்னுடைய அஸ்தி கரையும் வரை இந்த தேசதத்திற்கான என்னுடைய துடிப்பு அடங்காது. பாரத் மாதா கீ ஜெய்!