ராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ! எச்சரிக்கும் சிஆர்பிஎஃப்


உசார் இந்திய ராணுவ வீரர்கள் போல் வேடம் அணிந்து நாட்டிற்கு எதிராக கருத்து சொல்லும் மாவோயிஸ்ட்கள் போலி வீடியோ

தமிழகம் முழுவதும் நேற்று ராணுவ வீரர் ஒருவர் பேசுவதுபோல் வீடியோ வெளியாகி வெளியான 12 மணி நேரத்தில் 25 ஆயிரம் நபர்களால் பகிரப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக 350 கிலோ வெடி பொருள்கள் நாட்டிற்குள் எப்படி வந்தது என்றும் அரசியல் லாபத்திற்காக அரசு எங்களை பலிகொடுக்க தயங்காது என்றும் பேசி இருந்தார் மேலும் அரசாங்கம் ஆணையிட்டால் நாங்கள் போர் செய்ய தயார் என்றும் இதுதான் எங்கள் எண்ணம் என்றும் சொல்லி இறுதியில் தனது பேச்சில் முழுவதும் நாட்டிற்கு எதிராகவே பேசினார்.

அதை நம்பி தமிழகத்தில் உள்ள மக்களும் அதிகமாக ஷேர் செய்தனர் இது பரபரப்பு என்ற facebook பக்கத்தில் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது ஆனால் இந்த வீடியோவில் இருப்பது ராணுவ வீரரே இல்லை.

மேலும் இதுவரை பேசிய ராணுவ வீரர்கள் tik tok ஆப் மூலமோ அல்லது தங்கள் சொந்த facebook பக்கத்தில் இருந்துதான் வெளியிட்டிருந்தார்கள் அவர்கள் அணிந்திருந்த உடையில் ராணுவ வீரர்கள் பெயர் இருக்கும்.

ஆனால் இந்த நபரோ அவரது பெயரை வெளியிடாமல் கனடாவில் இருந்து பேசுகிறார் மேலும் அவரது முகத்தை ஸ்லிங் வியூ ஆப் மூலம் மாற்றம் செய்து விடீயோவினை வெளியிட்டுருக்கிறார்.

இணையத்தில் பரவிய மீம்கள் மற்றும் மக்களிடம் விதைக்கப்பட்ட கருத்துக்களை ராணுவ வீரர்கள் போல் சொன்னால் மக்களை நம்பவைத்துவிடலாம் என்று இதுபோன்ற விடீயோக்களை வெளியிட்டு ராணுவ வீரர்களை அவமான படுத்தி வருகின்றனர்.

இந்திய ராணுவ வீரர்களின் இறப்பு மனதில் வேதனையை உண்டாக்கியபோது இது போன்ற தேச விரோத சக்திகள் மக்களை ஏமாற்றி நாட்டிற்கு எதிராக இளைஞர்களை மூளை சலவை செய்வதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது போன்ற தகவல்கள் உண்மை அல்ல இவற்றை நம்பவேண்டாம் என்றும் CRPF தெரிவித்துள்ளது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...