கொச்சியில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் இருந்து கடந்த 2011ம் ஆண்டு வனத்துறையினர் யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், மோகன்லால் யானை தந்தங்களை வைத்திருப்பதில் தவறு இல்லை என்று அரசு, நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி கமால் பாஷா, மோகன்லாலுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.