முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க முயற்சி எடுப்பதாக தமிழக அரசு காட்டிக்கொள்வது தேர்தலை மனதில்கொண்டு வெளிப்படும் அறிவிப்பு என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னையில் திமுக தலையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் நடைபெற்றது.
இந்த நேர்காணலுக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் திமுக கூட்டணி உறுதி செய்யப்படும் என்றார். திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.