திருமங்கலம் அருகே இலங்கை அகதியை திட்டி, தற்கொலைக்குத் தூண்டியதாக கூறப்பட்ட வருவாய் ஆய்வாளர் மீது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கூத்தியார்குண்டு பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அகதிகளை கணக்கெடுக்கும் பணிக்காக, வருவாய் ஆய்வாளர் துரைபாண்டியன் நேற்று முகாமிற்கு சென்றுள்ளார்.
அப்போது ரவீந்திரன் மற்றும் அவரது மகன் மட்டும் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து துரைபாண்டியன் விளக்கம் கேட்ட போது, ரவீந்திரன் அங்கு வந்துள்ளார். தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக ரவீந்திரன் விளக்கமளித்தார்.
ஆனால், அதனை ஏற்காத அதிகாரி, வருகை பதிவேட்டில் குறிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், ரவீந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரவீந்திரன், அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி, தற்கொலை செய்து கொண்டார்