திராவிட இயக்கங்களில் சாதனைப் பட்டியலில் மேலும் ஒரு மைல்கல்! பாகிஸ்தானில் தவறுதலாக தரை இறங்கிய விமானி அபிநந்தன் என்ன ஜாதி என்று அந்த ஒருநாளில் கூகுளில் தேடியவர்கள் 10 லட்சம் பேர்…! இப்படி ஒரு அசத்தல் சாதனையைச் செய்திருக்கிறார்கள் தமிழர்கள்!

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்து நேற்று தாயகம் திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் அபிநந்தன் கடந்த ஒரு வாரத்தில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் இருந்தார். கூகுள் தேடலில் அதிகம் பேர் அவரைக் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர். ஆனால், அவர்கள் அவ்வளவு ஆர்வம் காட்டியதற்குப் பின்னணியில் அவர் என்ன ஜாதி என்ற தேடல்தான் அதிகம் இருந்தது.

இன்றைய நிலவரப் படி, கூகுளில் அபிநந்தனின் ஜாதி என்ன என்று கேட்டுத் தேடியவர்களின் எண்ணிக்கை சுமார் 12 லட்சத்தை எட்டியுள்ளது.

இதுகுறித்து சிலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். காரணம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அபிநந்தன் வர்தமான் என்றும் பெயர் இருப்பதால் அவர் ஜைன மதத்தைச் சேர்ந்தவர் என்று சிலர்ச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். சிலர் அவர் பிராமண சாதியைச் சேர்ந்தவர் என்று தகவல் பரப்பினர். இதனால் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் சுறுசுறுப்படைந்து, கூகுளில் மேய்ந்தனர்.

இதனை குறிப்பிடும் பலரும், தமிழகத்தில் சாதி வெறி புரையோடிப் போயுள்ளதற்குக் காரணம், திராவிட இயக்கங்கள்தான்! சாதியை வைத்து அரசியலில் காலூன்றிய திராவிட இயக்கங்கள், இப்போதும் அதனைத் தொடரத்தான் செய்கின்றன. சாதி வெறி நாக்கு நுனியில் தெரிய பேசி வரும் சுபவீரபாண்டியன் போன்றவர்கள் பேராசிரியர்களாக இருந்து எப்படி மாணவர்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதற்கு, இந்த கூகுள் தேடல் விடை தரும்! என்கின்றனர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...