2ஜி புகழ் ஆ.ராசா நீலகிரியில் போட்டியிட விருப்ப மனு!

a raja kanimozhi

நீலகிரியில் போட்டியிட ஆ.ராசா முடிவு செய்துள்ளார். அவர், திமுக சார்பாக நீலகிரியில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரியில் போட்டியிட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா முடிவு செய்துள்ளார். இன்று காலை திமுக அலுவலகம் வந்த அவர் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.

ஆ.ராசா ஆதரவாளர்களும் அவர் விருப்பமனு தாக்கல் செய்த போது உடன் இருந்தனர். நீலகிரி தொகுதி தனித் தொகுதி.

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்காக, திமுக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும், திமுக சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. திமுகவில் இதுவரை முக்கியத் தலைவர்கள் எவரும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யாத நிலையில், 2ஜி புகழ் ஆ.ராசா முதல்நபராக விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக பெரம்பலூர் தொகுதியில் 4 முறை போட்டியிட்டு 3 முறை வென்றிருக்கிறார். பின்னர் நீலகிரிக்கு 2009ல் மாறினார். அப்போது வென்றவர், 2ஜி புகழ் ஆ.ராசாவாக மாறினார். பின்னர் 2014 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தோல்வியே அடைந்தார். இந்நிலையில், மீண்டும் இதே நீலகிரி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.