பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் குறித்து ஆதாரம் கேட்பதா என்று மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழித்ததற்கான ஆதாரங்களைக் கேட்டு, ராணுவத்தின் மீது நம்பிக்கை இழக்கச் செய்யும் வகையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் பேசுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்  பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இவ்வாறு கேள்வி எழுப்பினார். இந்தப் பொதுக்கூட்டத்தில், பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமாரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பீகாரைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரருக்கு அஞ்சலி செலுத்தினார். பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்ததை எண்ணி ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் நமது சொந்த மண்ணைச் சேர்ந்த சிலர் சர்ஜிகல் தாக்குதல் தொடர்பாக சந்தேகங்களை எழுப்புகின்றனர்… என்று காங்கிரஸ் கட்சியினரை மறைமுகமாக சாடினார் மோடி.மேலும், இந்தத் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை எதிர்க் கட்சிகள் கேட்கத் தொடங்கி இருப்பது, எதிரி நாட்டுக்கு பயன் விளைவிக்கக் கூடியது என்று கூறிய மோடி,  பல ஆண்டுகளாக இருந்து வந்த ஊழல் மற்றும் இடைத்தரகர் முறையை ஒழிக்கும் தைரியம் பாஜக அரசுக்கு மட்டுமே உள்ளது என்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய போது, கூட்டத்தில் இருந்தவர்கள் ஆரவாரம் செய்து கைத்தட்டி, தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய மோடி…

அவங்க சொல்றாங்க.. மோதியை முடிச்சுடலாம்னு; நான் சொல்றேன் நாம ஒண்ணா சேர்ந்து பயங்கரவாதத்தை முடிக்கலாம்னு..!

அவங்க சொல்றாங்க.. நாம ஒண்ணா சேர்ந்து போராடி மோதியை ஒழிச்சுடலாம்னு; நான் சொல்றேன் நாம ஒண்ணா சேர்ந்து, நம் தேசத்துக்காக எதிரிகளோடு போராடும் நம்மோட ராணுவ படையை பலப்படுத்தலாம்னு..!

அவங்க சொல்றாங்க.. மோதியை ஒழிச்சு கட்டலாம்னு; நான் சொல்றேன் நாம எல்லாருமே ஒண்ணா சேர்ந்து ஊழலையும், லஞ்சத்தையும் ஒழுச்சு கட்டலாம்னு..!

அவங்க சொல்றங்க.. மோதியை காலி பண்ணலாம்னு; நான் சொல்றேன்.. நாம எல்லாருமே சேர்ந்து வேலை செய்து நாட்டின் திறந்தவெளிக் கழிப்பிடத்தை காலி பண்ணலாம்னு..!

அவங்க சொல்றாங்க.. மோதியை தீர்த்துக் கட்டலாம்னு; நான் சொல்றேன் தேசத்தின் வறுமையையும், மக்களின் ஊட்டச்சத்து குறைவையும் தீர்த்துக் கட்டலாம்னு..!

அவங்க சொல்றாங்க.. ஒண்ணா சேர்ந்து போராடி மோதியைத் துரத்தலாம்னு; நான் சொல்றேன் நாம ஒண்ணா கை கோர்த்து 21 வது நூற்றாண்டின் தலைவராக நம் பாரதத்தை மாத்தலாம்னு..!

அவங்களோட ஒரே குறிக்கோள்.. மோதியை ஒழிப்பது; ஆனால் இந்த மோதியோட குறிக்கோள்.. இரவும் பகலுமாக உழைச்சு பாரத மாதாவையும், 130 கோடி பாரதீயர்களையும் வளர்ச்சிப் பாதையில் எடுத்துக்கிட்டு போகலாம்னு..!

அதனால்.. என்னுடைய அன்பு சகோதர சகோதரிகளே.. நீங்கதான் உங்களுக்கு எது வேணும்னு முடிவு செய்யணும்..! என்று.. பிரதமர் நரேந்திர மோடி பாட்னா – சங்கல்ப் ராலியில் உத்வேகம் ஊட்டும் வகையில் பேசினார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...