தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதை அடுத்து தலைமைச் செயலகத்தில்
வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் புகைப்படங்கள், அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், அரசின் சாதனை விளக்கப் புகைப்படங்கள் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டன.

மேலும், பல்வேறு பகுதிகளிலும், அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.  சென்னை ஆர்.கே.சாலை, ஆர்.கே.நகர் ஆகிய இடங்களில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு
வருகின்றன.

கோவை மற்றும் மதுரையில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் கிழித்து
அகற்றப்படுகின்றன. சத்தியமங்கலம், சேலம் உள்ளிட்ட இடங்களிலும் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...