அமமுக., முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் தினகரன்

ஞாயிற்றுக் கிழமை இன்று காலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது.

அமமுக., சார்பில் போட்டியிடும் 24 தொகுதி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார் அமமுக., துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

அம்மா மக்கள் முன்வேற்ற கழகம் சார்பில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரான தினகரன் இன்று காலை வெளியிட்டார்.

இதில் 24 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 9 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சட்டசபை இடைத்தேர்தலில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ.,க்கள் மீண்டும் அவரவர் தொகுதிகளில் போட்டியிடவுள்ளனராம்.

1.திருவள்ளூர் – பொன்.ராஜா
2.தென் சென்னை – இசக்கி சுப்பையா
3.ஸ்ரீபெரும்புதூர் – நாராயணன்
4.காஞ்சிபுரம் – முனுசாமி
5.விழுப்புரம் – கணபதி
6.சேலம் – எஸ்.கே.செல்வம்
7.நாமக்கல் – சாமிநாதன்
8.ஈரோடு – செந்தில்குமார்
9.திருப்பூர் – எஸ்.ஆர்.செல்வம்
10.நீலகிரி – எம்.ராமசாமி
11.கோவை – அப்பாதுரை
12.பொள்ளாச்சி – முத்துகுமார்
13.கரூர் – தங்கவேல்
14.திருச்சி – சாருபாலா தொண்டைமான்
15.பெரம்பலூர் – ராஜசேகரன்
16.சிதம்பரம் – இளவரசன்
17.மயிலாடுதுறை – செந்தமிழன்
18.நாகை – செங்கொடி
19.தஞ்சை – முருகேசன்
20.சிவகங்கை – பாண்டி
21.மதுரை – டேவிட் அண்ணாதுரை
22.ராமநாதபுரம் – ஆனந்த்
23.தென்காசி – பொன்னுத்தாய்
24.நெல்லை – ஞான அருள்மணி

சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளர்கள் :
1. திருப்போரூர் – கோதண்டபாணி
2. குடியாத்தம் (தனி) – ஜெயந்தி பத்மநாதபன்
3. ஆம்பூர் – பாலசுப்பிரமணி
4. அரூர் (தனி) – முருகன்
5. மானாமதுரை (தனி) – மாரியப்பன் கென்னடி
6. சாத்தூர் – எதிர்கோட்டை சுப்ரமணியன்
7. பரமக்குடி (தனி) – டாக்டர். முத்தையா
8. பூவிருந்தவல்லி (தனி) – ஏழுமலை
9. பெரம்பூர் – வெற்றிவேல்

#Election2019 | #AMMK | #CandidateList | #TTVDhinakaran #ELECTIONBREAKING

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...