மனோகர் பாரிக்கர் மறைவு; பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்!

goa manohar parickar

கோவா முதல்வர், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு, மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்…

கோவா முதல்வரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான திரு. மனோகர் பாரிக்கர் இன்று (17/03/2019) காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனையையும் வருத்தமும் அடைந்தேன்.

மூன்று முறை முதலமைச்சராகவும், பாதுகாப்பு துறை அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டவர் திரு. மனோகர் பாரிக்கர் அவர்கள்.

முதலமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர் அவர்கள் கணைய புற்று நோயுடன் போராடி கொண்டிருந்த போதும் கூட, தன் கடைசி மூச்சி இருக்கும் வரை நாட்டு மக்களுக்காகவும், மாநில மக்களுக்காகவும் உழைக்க வேண்டும் என்ற தன்னலமற்ற உயர்ந்த நோக்கை கொண்டிருந்தார். அவர் எண்ணியது போல கடைசி மூச்சி வரை பொதுமக்களுக்காக சேவை செய்தே வாழ்ந்து இறந்துள்ளார்.

இவரின் சேவை மனப்பான்மையும், மக்கள் மீது அவர் கொண்டிருந்த பாசமும் அளப்பரியது.

அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவிப்பதோடு,
அவரை நேசிக்கும் மக்களுடைய துயரங்களிலும், எனது பா.ஜ.க. சொந்தங்களின் துயரங்களில் பங்கு கொள்கிறேன்.

திரு. மனோகர் பாரிக்கர் அவர்களின் ஆன்மா நற்கதி அடைய எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்… என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.