19/09/2020 8:45 AM

மீண்டும் மோடி! டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு!

சற்றுமுன்...

தோலம்பாளையத்தில் இறையருள் அறக்கட்டளை தொடக்கம்!

திருமந்திர திலகம் மருத்துவர் பொன். மாணிக்கவல்லி அவர்கள் பெயர்ப் பலகையை திறந்து வைத்து

சூர்யா… நீதிமன்றம் லேசா எடுத்துக்கிச்சி… ஆனா போலீஸு!? கேஸு போட்டிருச்சில்ல…!

காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி! பிறகு..?

என்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.

செப்.18: தமிழகத்தில் இன்று… 5488 பேருக்கு கொரோனா; 67 பேர் உயிரிழப்பு!

இதுவரை கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,75,717 ஆக உயர்ந்துள்ளது

விவசாயத் துறையில் தேவையான சீர்திருத்தங்கள் கொண்டது இந்த மசோதா!

அரசியல் ஆத்திக்கத்திற்கும், அதன் வழியாக விவசாயிகளை அரசியல் குழுக்களாக மாற்றுவதற்கும் பயன்பட்டு வந்தது

modi superb

283 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.

டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆா் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான தேஜகூட்டணி., மொத்தமாக 283 தொகுதிகளில் வென்று கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறியுள்ளது. மேலும், காங்கிரஸ் தலைமையிலான ஐமு.கூட்டணி 135 தொகுதிகளிலும் வெல்லும் என்கிறது அந்தக் கருத்துக் கணிப்பு!

17 ஆவது மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, ஆளும் தே.ஜ.கூட்டணி மற்றும் முந்தைய ஐ.மு.கூட்டணி, மகாகட்பந்தன் என்ற பெயரில் செயல்படும் மூன்றாவது மாநிலக் கட்சிகளின் அணி என பல தரப்பும் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான மும்முரத்தில் உள்ளன. இந்நிலையில் வரும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகளும் களை கட்டி வருகின்றன.

குறிப்பாக, முந்தைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டும், ராகுல் காந்தியின் பிரசாரம், மாறிவரும் கூட்டணிகளின் சூழல், கட்சிகளின் நிலைப்பாடு இவையும் இந்தக் கருத்துக் கணிப்புகளில் மாற்றங்களைக் கொண்டு வரலாம். இந்நிலையில்,டைம்ஸ் நவ், விஎம்ஆா் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி…..


[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”35″ order=”desc”]


கேரளா: கேரளத்தில் இடதுசாரிகளுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருக்கும் யுடிஎப் (ஐக்கிய ஜனநாயக முன்னணி) கூட்டணி 16 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதியிலும், இடதுசாரிகள் 3 தொகுதிகளிலும் வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

chandrababu naidu

ஆந்திரா: இங்கே தெலுகு தேசம் பெரும் சரிவைச் சந்திக்கும் என்று கூறப் படுகிறது.

இங்கு மொத்தமுள்ள 25 தொகுதிகளில், ஒய்.எஸ்.ஆா்.காங்கிரஸ் 22 தொகுதிளிலும், தெலுங்கு தேசம் கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. பாஜக, காங்கிரஸ்க்கு எதுவும் கிடைக்காது என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா: இங்கே சட்டப் பேரவைத் தேர்தலில் பெற்ற அதே வெற்றியை சந்திரசேகர் ராவ் தக்கவைப்பார் என்கிறார்கள்.

இங்கு, 17 தொகுதிகளில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 13 தொகுதிளிலும், பாஜக 2, காங்கிரஸ் 1 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

கா்நாடகா: இரு கூட்டணியும் சரிபாதி வெல்லும் என்கிறார்கள்.

28 தொகுதிகளில், பாஜக 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் பெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

mamta bjp rally

மேற்குவங்கம்: இங்கு திரிணமுல், பாஜக., வெற்றி பெறும். காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள் படுதோல்வியை சந்திப்பர் என்கிறார்கள்.

42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 31 தொகுதிகளிலும், பாஜக 11 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

பிகார்: இங்கு தேஜ.கூட்டணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 13 தொகுதிகளும் கிடைக்கக் கூடும்.

ஜார்கண்ட்: இங்கு இரு கூட்டணிகளும் சரிபாதி பெற வாய்ப்பு உள்ளது.

பாஜக 8 தொகுதிளிலும், காங்கிரஸ் கூட்டணி 6 தொகுதிளிலும் வெற்றி பெறக் கூடும்.

naveen patnaik

ஒடிசா : இங்கு பாஜக., அதிக தொகுதிகளைப் பெறலாம்.

மொத்தமுள்ள 21 தொகுதிகளில், பாஜக 14 தொகுதிகளிலும், பிஜூ ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

அஸ்ஸாம் : இங்கு பாஜக.,வுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும்.

14 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 4, பாஜகவுக்கு 8, ஐடியுஎப்க்கு 2 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது

மகாராஷ்டிரா: இங்கு தேஜ.கூட்டணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

மொத்தமுள்ள 48 தொகுதிகளில், பாஜக 39 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

குஜராத் : இங்கு பாஜக., ஒட்டுமொத்தமாக வெற்றி பெறும் எனப்படுகிறது.

பிரதமா் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதால், தற்போதும் மோடிக்கான செல்வாக்கு அதிகம் இருப்பதால், இங்கு பாஜக 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

mayavati akilesh

உத்தரப்பிரதேசம்: மாறிவரும் கூட்டணி காரணத்தால், பாஜக., பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்லும் எனப்படுகிறது.

இங்கு பாஜக.,வுக்கு 42 தொகுதிகளும், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு 36 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 2 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.

உத்தராகண்ட்: சிறிய மாநிலமான இதில், பாஜக., அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் என்கிறார்கள்.

இங்கு பாஜக 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம்: மாநிலத்தில் ஆட்சியை ஓரிரு இடங்களில் கோட்டை விட்ட பாஜக., இம்முறை அதிக தொகுதிகளைப் பெறும் என்கிறார்கள்.

பாஜக 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

ராஜஸ்தான்: சட்டப் பேரவைத் தேர்தலில் சரிவு ஏற்பட்டாலும், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக., நல்ல வெற்றி பெறும் என்கிறார்கள்.

25 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

07 July09 Arvind Kejriwal

தில்லி : தில்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஹரியானா: இங்கும் பாஜக.,வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

10 தொகுதிகளில் பாஜக 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

பஞ்சாப்: இங்கு ஆளும் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 12 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 1 தொகுதியிலும் வெற்றி பெறலாம்.


[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”33″ order=”desc”]


ஜம்மு காஷ்மீா்: இங்கு பாஜக 2 தொகுதிகளிலும், ஜெகேஎன் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

இமாச்சல பிரதேசம் :4 தொகுதிகளில் பாஜக 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெறக் கூடும்.

சண்டிகா் : இருக்கும் ஒரு தொகுதியை பாஜக., கைப்பற்றும் என்கிறார்கள்.

சத்தீஸ்கா்: பாதிக்கும் மேல் பாஜக., கைப்பற்றும் என்கிறார்கள்.0

மொத்தமுள்ள 11 தொகுதிகளில் பாஜக 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது

Rahul will become PM and Stalin will be CM in 2019

தமிழகம்: திமுக, கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்கிறார்கள்.

மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 34 தொகுதிகளிலும், பாஜக, அதிமுக கூட்டணி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறும் எனப் படுகிறது.

நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக கூட்டணி 283 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று இந்தக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 135 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 125 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறப் படுகிறது.

தேர்தல் தொடங்க இன்னும் மூன்று வாரம் உள்ள நிலையில், நாட்டில் நிலவும் பிரசார பலம், அரசியல் சூழல் வேறு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்கிறார்கள்.


[poll id=”12″]


 

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

திமுக Vs அதிமுக: ‘நீட்’டுக்குக் காரணம் யார்? நீளும் வார்த்தைப் போரின் பின்னணி!

அவர் இது சட்டரீதியாக செல்லுபடியாகாது என்று அறிவுறுத்தியதன் பேரில் அது மேலே தொடரப்படவில்லை...

சமையல் புதிது.. :

ஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்!

வெங்காய பீர்க்கங்காய் மசியல் தேவையான பொருட்கள் வெங்காயம். 200 கிராம்பீர்க்கங்காய். 200 கிராம்காய்ந்த மிளகாய்-6புளி....

சினிமா...

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா. 

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

செய்திகள்... மேலும் ...

Translate »