வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும், பிரபல சினிமா திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷிற்கு சொந்தமான இடங்களில், வருமான வரி சோதனை கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. வரி ஏய்ப்பு, கருப்பு பண பரிமாற்றம் புகாரின் அடிப்படையில் சோதனை தொடங்கியது.
சென்னையில் உள்ள அவரது இல்லம், பல்கலைக்கழகம் அவருக்கு தொடர்புடைய 27 இடங்கள் மற்றும் தெலங்கானாவில் உள்ள மூன்று இடங்கள் உட்பட மொத்தம் 30 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.300 கோடி வருவாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.