உலக வானிலை நாள் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 இல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள். ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகத்தால் பிரகடனம் செய்யப்பட்டாதாகும்.
வானிலை அறிவு மற்றும் புள்ளிவிபரங்கள், வானிலையைச் சமாளிக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது என்பது இந்நாளின் தலைப்பாகும். உலக வானிலை அமைப்பு தலைமையகத்தில் அதே நாள் தொடர்புடைய நினைவு நடவடிக்கைகள் நடைபெற்றன.
வானிலை தொடர்புடைய நடவடிக்கைகளில், வானிலை அறிவுகளின் பங்குகளை அதிகரிக்க வேண்டும் என்று ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகம் 23ஆம் நாள் வெளியிட்டது. வானிலையின் மாற்றம், மக்கள் அனைவரின் அன்றாட வாழ்க்கையுடன் நெருக்கமாக தொடர்புடையது என்று உலக வானிலை அமைப்பின் தலைமை செயலாளர் மைகல் ஜரொத் அதே நாள் நடைபெற்ற நடவடிக்கையில் உரை நிகழ்த்திய போது தெரிவித்தார். அவர் கூறியதாவது
வானிலையின் மாற்றத்தில், மக்களுக்கு அதிகமான தொடர்புகள் இருக்கின்றன. வேளாண் துறை, சுற்றுலா, அடிப்படை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட சமூகப் பொருளாதாரத் துறைகளில் இது செல்வாக்கு கொள்கின்றது. தவிரவும், தண்ணீர், உணவுப் பொருட்கள், எரியாற்றல் முதலியவற்றுக்கு வானிலையின் மாற்றம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொடரவல்ல வளர்ச்சியின் வேகத்தையும் இது குறைத்துள்ளது. மேலும், தொடரவல்ல வளர்ச்சிக்கு அறைகூவல்களைக் கொண்டு வரும். இத்தகைய அறைகூவல், வளரும் நாடுகளுக்கு மட்டுமல்லாமல், வளர்ச்சியடையும் நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டின் உலக வானிலை நாளில், உலக வானிலை அமைப்பு, 2014ஆம் ஆண்டின் வானிலை நிலைமை பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, கடந்த பத்து ஆண்டுகளில், உலக வானிலை தொடர்ந்து வெட்பமாகியுள்ளது. மக்களின் நடவடிக்கைகள், உலகத்திற்கு வெட்பத்தை அதிகரிப்பதாக இவ்வறிக்கை காட்டுகிறது.
மேலும், ஐ.நாவின் வானிலை மாற்றத்திற்கான கட்டுகோப்பு உடன்படிக்கை கூட்டம், இவ்வாண்டின் இறுதியில் நடைபெறும். வானிலை மாற்றம் குறித்து, உலகில் ஒரு புதிய உடன்படிக்கையை எட்டுவது, வளரும் நாடுகள் வானிலை மாற்றத்திற்கு ஏற்ப சமாளித்து, தொடர்புடைய கொள்கைகளை வகுப்பதற்கு துணை புரியும். இந்த முறை தொடர்புடைய நடவடிக்கைகள் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...