நயன்தாராவை அசிங்கமாகப் பேசிய ராதாரவி… தேர்தல் முடியும் வரை திமுக.,வில் இருந்து நீக்கம்!

கொலையுதிர் காலம் என்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து அவதூறாகப் பேசியதாகவும், இதற்கு வெகுண்டு எழுந்து சினிமா உலாகம் நடிகர் ராதாரவிக்கு கண்டனம் எழுபியதாகவும் செய்திகள் கடந்த இரு நாட்களாக வெளி வந்து கொண்டிருந்தன.

திமுக.,வைச் சேர்ந்த நடிகர் ராதாரவி, இவ்வாறு கொச்சையாகப் பேசுவது புதிதல்ல. பல்வேறு தருணங்களில் பாலியல் ரீதியாக இரட்டை அர்த்த வசனங்களுடன் மேடையிலும், செய்தியாளர் சந்திப்புகளிலும் பேசியிருக்கிறார். அவ்வப்போது அது பிரச்னையைக் கிளப்பி, பின்னர் அடுத்த ஓரிரு தினங்களுக்குள் அமுங்கி விடும்.

இந்த முறை ராதாரவி பேசியது மிகவும் கீழ்த்தரமானது என்பது மட்டுமல்ல், இதற்கு நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவனும், ராதாரவியால் ஏற்கெனவே கொச்சைப் படுத்தப் பட்ட கேவலப் படுத்தப் பட்ட பாடகி சின்மயியும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்ற அளவில் இந்த விவகாரம் ஊடகங்களில் நின்றுவிட்டது.

ஆனால், இந்நேரம் ராதாரவிக்கு எதிராகவும் திமுக.,வுக்கு எதிராகவும் இந்து இயக்கங்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டும்.! காரணம் ராதாரவி, நயன்தாராவை மட்டும் கேவலப் படுத்திப் பேசவில்லை; இந்துக்கள் தெய்வமாக வணங்கிப் போற்றும் சீதாமாதாவையும் கேவலப் படுத்தியிருக்கிறார்.

ராதாரவியின் கொச்சை வார்த்தைகள் இவை…!  நயன்தாரா ஒரு படத்தில் பேயாக நடிக்கிறார்.. இன்னொரு படத்தில் சீதாவாக நடிக்கிறார்…! அந்தக் காலத்துல சீதா கேரக்டருக்கு கே.ஆர்.விஜயாவை நடிக்க கூப்ட காத்திருப்பாங்க… அதாவது சீதா கேரக்டர்ல நடிக்கிறதுக்கு கும்பிடத் தோணறவங்களையும் நடிக்க வைக்கிறாங்க… கூப்பிடத் தோன்றவங்களையும் நடிக்க வைக்கிறாங்க…!  – என்று அவர் பேசியது இரட்டை அர்த்த கொச்சைப் பேச்சு மட்டுமல்ல… இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 பிரிவு 51A ( e)ன் படி, அவதூறு கிளப்புதல் மற்றும் அடிப்படை நம்பிக்கைகளை தகர்த்தல எனும் பிரிவுகளில் வழக்கு பதியக் கூடிய பேச்சுதான்.  

ஒரு சக நடிகையைப் பார்த்து, கூப்பிடத் தோணுகிறவர் என்று கேவலப் படுத்திப் பேசும் அளவுக்கு தரம் தாழ்ந்த, அடிக்கடி கூப்பிட்டிருக்கக் கூடிய, ஒருவரைப் பார்த்ததுமே கூப்பிடுவதற்கு மனதில் தோன்றக் கூடிய, அதை பொதுமேடையில் ஜம்பமாகப் பேசக் கூடிய… சமூகத்தின் இழிநிலை மனிதர்களைத்தான் திராவிட பாரம்பரியம் வளர்த்திருக்கிறது என்பதும், இவர்களைப் போன்றவர்களைத் தான் திமுக., தனது கட்சியில் உறுப்பினர்களாகவும், பிரசார பீரங்கிகளாகவும் பயன்படுத்தி வருகிறது என்பதும் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியிருக்கிறது.

கட்சித் தலைவனே பெரும்பான்மை ஹிந்து சமூகத்தால் காறித் துப்பும் அளவுக்கு ஒரு காயலான் கடையை வாயில் வைத்திருக்கும் போது, திமுக., பிரசார பீரங்கிகள் மட்டும் என்ன சந்தனத்திலும் பன்னீரிலும் குளித்தெழுந்த தூய்மையானவர்களாகவா இருப்பார்கள்! சாக்கையில் உழலும் பன்றிகளுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லைதான்!

இதில், தனது சகோதரர் பேச்சுக்காக ஒப்புக்கு ஒரு எதிர்ப்பையும் பதிவு செய்திருக்கிறார் நடிகை ராதிகா. அவர் தனது பதிவில் “இன்றைய நிலையில் நயன்தாரா ஒரு அர்ப்பணிப்பு தன்மையுள்ள நடிகைகளில் ஒருவர். ராதாரவி பேசிய காணொளி முழுவதையும் நான் பார்க்கவில்லை இருப்பினும் ராதாரவியை இன்று சந்தித்து அவரது கருத்து தவறானது என்று எடுத்துக் கூறினேன்” என்று பதிவிட்டுள்ளார்.

நயன்தாராவின் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பதிவில் “ஒரு பழம்பெரும் நடிகர் குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர் இழிவான வகையில் ஒருவரை விமர்சனம் செய்திருப்பதும், அதற்கு எதிராக எந்த சங்கமும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும். அதற்கும் மேலாக தரமற்ற இந்தப் பேச்சுக்கு கைதட்டி சிரிக்கும் பார்வையாளர்கள் குறித்தும் வருத்தமாக உள்ளது” என்று  பதிவிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவனின் கூற்றைப் பார்க்கும் போது, மேடையின் கீழமர்ந்து கைத்தட்டிய ரசிகர்களின் மனப்போக்கை யோசித்துப் பார்த்தால், திராவிடம் வளர்த்த சினிமாவின் விசிலடிச்சான் குஞ்சுகளின் கைத்தட்டிப் பாராட்டும் வக்கிர புத்தி நன்றாகத் தெரிகிறது.

ஏற்கெனவே இந்துக்களையும் இந்து மத தத்துவங்கள், நடைமுறைகளையும் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி என ஒருவர் விடாது திமுக., தலைவர்கள் அனைவருமே கேவலப் படுத்தியும், அசிங்கப் படுத்தியும் மேடைகளில் முழங்கி வரும்நிலையில், ராதாரவியும் அந்த ஈனர்களின் கூட்டத்தில் தானும் ஒருவர் என்று காட்டியிருக்கிறார்.

திமுக.,தான் இப்படி என்றால் சினிமா உலகம் அதைவிட படுமோசமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சக நடிகையை, சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஒரு நடிகையை, பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுகிறது என்று அசிங்கமாக ஒருவர் பேசிய பின்பும், சங்கமோ, யூனியனோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே..! அதிலிருந்தே இவர்களின் தரம் தெரிகிறது என்பது சின்மயி வெளிப்படுத்திய ஆதங்கம். ஒரு பெண்ணாக, திராவிடத்தின் அசிங்கம் பிடித்த வைரமுத்து எனும் சாக்கடை வாய் வகையறாக்களிடம் விழுந்த சோகத்தைச் சுமப்பவர் வெளிப்படுத்திய ஆதங்கம்! ஆனால், கவனிப்பார் யாருமில்லையே! காரணம் யோக்கியர்கள் யாரும் இல்லையே என்ற எண்ணத்தைத்தான் அவர்களின் அமைதி உணர்த்துகிறது.

இந்நிலையில், வழக்கம் போல் பிறரை பலிகடா ஆக்கும் திமுக.,வின் இயல்புக்கு ஏற்ப, திமுக., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாலும் திமுக., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதற்குக் காரணம், விக்னேஷ் சிவனின் ஒரு டிவிட்டர் பதிவு. எந்த முகத்தை வைத்துக் கொண்டு, பொள்ளாச்சி விவகாரத்தில் குளிர்காய்ந்தீர்கள்?! பொள்ளாச்சியை ஊடகங்களில் அரசியலாக்கி, கோடிகளுக்கு விலைபோன கேடி நக்கீரன் கோபாலை வைத்து ஊடக விபசரம் செய்த திமுக.,வுக்கு சுருக்கென எழுப்பிய விக்னேஷ் சிவனின் கேள்வி…

இதை அடுத்து, தற்காலிகமாக (தேர்தல் முடியும் வரை) ராதாரவியை கட்சியை விட்டு நீக்கி வைப்பதாக திமுக., அறிவித்துள்ளது. திமுக., அதிமுக., என்று திராவிடக் கட்சிகளில் பயணப் பட்டு அவ்வப்போது தாய்க் கழகத்தில் இணைவதும் பிரிவதுமாய் இருக்கும் ராதாரவியை கட்சியை விட்டு விலகுவதாக அறிக்கை அளிக்கவும் திமுக., தரப்பு கட்டாயப் படுத்தி வருகிறது என்கிறார்கள்!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...