ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே ஜெய்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 184 ரன்கள் எடுத்தது, 185 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட்களை இழந்து 170 ரன்கள் எடுத்து, 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.