ஐடி ரெய்டு மூலம் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது: கர்நாடகா முதல்வர்

Dhin news kumarasamy

வருமான வரித்துறை போன்ற நிறுவனங்களை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டிய சில மணி நேரங்களில் பெங்களூரின் பல்வறு இடங்களில் நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.

இதில் அரசியல் செல்வாக்கு மிக்க தொழிலதிபர் ஒருவரின் வீடு, அலுவலகத்திலும் இந்த சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும் போது மாநில காவல்துறையிடம் பாதுகாப்பு கோருவது வழக்கம். ஆனால் வருமான வரித்துறையினர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் உதவியுடன் சோதனை நடத்த இருப்பதாக குமாரசாமி தெரிவித்திருந்தார்.

விமான நிலையத்தில் இருந்து அதிகாரிகளை அழைத்துச் செல்ல 200 வாடகைக் கார்கள் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். காங்கிரசுக்கும் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கும் நெருக்கமான தொழிலதிபர்களை குறிவைத்து இந்த சோதனைகள் நடத்தப்படுவதாகவும் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.