பிரதமர் மோடியின் தமிழக பிரச்சார பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திரமோடி நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் வரும் 8ம் தேதி தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பிரதமர் மோடியின் தமிழக பிரசார பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர் ஏப்., 8ம் தேதிக்கு பதிலாக ஏப்., 12, 13 தேதிகளில் தமிழகத்தில் பிரசார பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி ஏப்., 12ம் தேதி கோவையிலும், ஏப்., 13ம் தேதி தேனியிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari