வாக்காளர்கள், நல்ல கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஸ்ரீதரை ஆதரித்து பல்லாவரத்தில் பிரசாரம் செய்த அவர், தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி வெற்றி பெற்றால், தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேட்பாளர்கள் பாடுபடுவார்கள் என உறுதியளித்தார்.