spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஅதிர்ச்சி... காங்கிரஸின் சதி அம்பலம்! ரூ.6 ஆயிரம் கொடுக்க... ரூ.75 ஆயிரத்துக்கே வருமானவரி!

அதிர்ச்சி… காங்கிரஸின் சதி அம்பலம்! ரூ.6 ஆயிரம் கொடுக்க… ரூ.75 ஆயிரத்துக்கே வருமானவரி!

- Advertisement -

கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதை தெரியுமா!? நம் தென்னகத்தில் இத்தகைய சொலவடை உண்டு! அப்படி உங்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தைப் எடுத்து, தெருவில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு அந்தப் பணத்தைப் போடுபவர்களை நீங்கள் பார்த்திருகிறீர்களா?! அதுதான் ராகுல் காந்தியின் திட்டம்!

கஷ்டப் பட்டு உழைத்து பணம் சம்பாதித்து, நியாயமாக வரி கட்டுபவர்களின் பணத்தைப் பிடுங்கி, அதை எந்த வேலையும் பார்க்காத சோம்பேறிகளுக்கு பிச்சை போடுவது போலே போடும் திட்டம் தான் ராகுல் காந்தியின் திட்டம் என்கிறார்கள் காங்கிரஸிலேயே இருக்கும் விவரம் அறிந்தவர்கள்!

நியாய் எனப்படும் திட்டத்தை ராகுல் கடந்த வாரம் அறிவித்தார். அதன்படி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள 5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் மாதந்தோறும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப் படும் என்று கூறினார்.

இதைக் கேட்டு பலரும் ஆச்சரியம் அடைந்தனர். எப்படி இது சாத்தியம் என்று! நாட்டின் மொத்த பட்ஜெட்டில் ஒதுக்கீட்டு அளவே அவ்வளவுதானே வரும் என்று யோசித்தனர். ஆனால், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இது சாத்தியமே. இன்னும் பொருளாதார நிபுணர்களைக் கலந்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.

தற்போதைய சூழலில் நாட்டின் பொருளாதாரம் நன்றாக உள்ளது என்றும், இந்தச் சூழ்நிலையில் மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு பணம் கொடுப்பது சாத்தியமே என்றும் கூறினார் ப.சிதம்பரம். அதன் மூலம், தாங்கள் இருந்த போது ஊழல்களால் நாட்டின் கஜானா திவாலாகியிருந்ததையும் மோடி வந்த பின்னர், நிதி சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஊழலற்ற நிர்வாகத்தால் பொருளாதாரம் சரிப் படுத்தப் பட்டிருப்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். .

இந்நிலையில், 5  கோடி மக்களுக்கு அள்ளிக் கொடுப்பதற்காக, மீதமுள்ள நூறு கோடி மக்களின் அடிமடியில் கை வைக்க காங்கிரஸ் அரசு திட்டமிட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

நாட்டின் பொருளாதார நிலை நன்றாக உள்ளதால், தற்போது வருமான வரி செலுத்துவோரின் உச்ச வரம்பை 2.50 லட்சம் என்ற அளவிலும், சலுகை வரம்பாக ரூ.5 லட்சம் வரையிலும் விலக்கு பெறும் வகையில் தற்போதைய அரசு பட்ஜெட்டில் அறிவித்து பலரையும் மகிழ்ச்சிப் படுத்தியது. ஆனால், அதே வருமான வரி உச்ச வரம்பை மேலும் நெருக்கித் தான், வறுமைக் கோட்டை கணக்கிடும் வேலையை காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது இப்போது தெரியவந்துள்ளது.

இனி பிடித்தம், கழித்தல் எல்லாம் போக, ரூ. 75 ஆயிரம் வருட வருமானம் இருந்தாலே அதற்கு வருமான வரி கட்டுவதற்கான யோசனையை ராகுல் ஏற்றுக் கொண்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரூ.75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருமானம் உள்ளவர்கள் இனி வருமான வரி கட்ட வேண்டியிருக்கும் என்கிறார்கள் சிலர்.

இது குறித்த தகவல் ஒன்று இப்போது வைரலாகப் பரவி வருகிறது. இதன்படி பார்த்தால், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாதச் சம்பளம் முறையாகப் பெறுவோர் எல்லாரும் கடுமையாகப் பாதிக்கப் படுவார்கள் என்பது மட்டும் உறுதி. இப்படி மாதச் சம்பளம் பெறுவோரிடம் இருந்து நிதியை அடித்துப் பிடித்துப் பெற்று, அதை தனது தேர்தல் வாக்குறுதிக்காக, ஏழைகளுக்கு அளிக்கப் போவதாக ராகுல் காந்தி கூறியிருக்கிறார் என்ற விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்!

தற்போது  ஊடகங்கள் மட்டத்தில் பரவி வரும் தகவல் இதுதான்…

NYAY – நியாய் எனப்படும் மாதம் ரூ.6000 கணக்கில் வருடத்துக்கு ரூ.72000 கொடுப்பதாகச் சொல்லும் காங்கிரஸ் திட்டத்தை வடிவமைத்த வங்க பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி கீழ்க்காணும் வருமான வரித்திட்டத்தை முன் வைத்திருக்கிறார்.

India is grossly under taxed என்று times now பேட்டியில் சொல்லியிருக்கிறார் அபிஜித் பானர்ஜி முன் வைக்கப்படுவதாக சொல்லப்படும் வருமானம்-வரி விவரம்

₹75000 கீழ் – வரி இல்லை
₹ 75001-150000 – 20% வருமான வரி
₹ 150001-500000 – 30% வருமான வரி
₹ 500001-1000000 – 40% வருமான வரி
₹ 1000001-2000000 -50% வருமான வரி
₹ 2000000க்கு மேல் – 60% வருமான வரி

இந்த வரித்திட்டம் குறித்து அபிஜித் பானர்ஜி விவரம் சொல்ல மறுத்துவிட்டார். ஆனால். தகவலறிந்த பெயர் வெளியிட விரும்பாத காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இதை பத்திரிகைகளுக்குச் சொல்லி எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.

பணவீக்கம் (விலை வாசியேற்றம்) நல்லது என்றும் பணவீக்க வரி என்பதை நாம் பெரிதாக பார்ப்பதில்லை என்றும் அந்த வரி ₹72000 திட்டத்துக்கு மிக ஊக்கமாக இருக்கும் என்றும் அபிஜித் கூறுகிறார்.

இந்த வரி வருமானத்தின் மூலம் ₹72000 வருடத்துக்கு தர வருமானம் சேரும் என்றும் அபிஜித் பானர்ஜி சொல்லியிருக்கிறார்.

இவர் அமெரிக்க எம்ஐடியில் ஏழ்மைப் பொருளாதாரம் குறித்து படித்து பட்டம் பெற்றவர்.

Economist Abhijit Banerjee speaks with Rahul Shivshankar about the Congress’ Nyuntam Aay Yojana, or NYAY scheme. Abhijit decodes the scheme for us. Economist Abhijit Banerjee says, “India is a middle-income country, beginning to be lower income country” and says that ‘No NYAY without tax increase’ and middle class will have to bear the burden of the scheme. Listen in!

1 COMMENT

  1. இப்போதிருக்கும் வருமான வரி திட்டத்தை
    ₹75000 கீழ் – வரி இல்லை
    ₹ 75001-150000 – 20% வருமான வரி
    ₹ 150001-500000 – 30% வருமான வரி
    ₹ 500001-1000000 – 40% வருமான வரி
    ₹ 1000001-2000000 -50% வருமான வரி
    ₹ 2000000க்கு மேல் – 60% வருமான வரி
    என்று மாற்றி, UPA ஆட்சிக்கு வந்தால், மாத வருமானம் 75000 ரூபாய்க்குமேல் இருந்தால் வருமான வரி கட்டவேண்டும் என்றும் அதன் மூலம் நடுத்தர மக்களை ஏமாற்றி, ஏழைகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் கொடுக்க முனையும் காங்கிரஸின் சதி அம்பலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe