புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று பிரசாரம் செய்கிறார் என்று புதுச்சேரியில் மாநில மதிமுக பொறுப்பாளர் கபிரியேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், புதுச்சேரியில் மாநில இன்று மாலை 4 மணிக்கு தட்டாஞ்சாவடியில் 2 வேட்பாளர்களுக்கும் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு பேசுகிறார். இதைத் தொடர்ந்து 4.30 மணிக்கு முதலியார்பேட்டை வானொலி திடலில் பாராளுமன்ற வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார். மாலை 5 மணிக்கு கிருமாம்பாக்கத்தில் பேசிவிட்டு புதுவை சுற்றுப்பயணத்தை வைகோ நிறைவு செய்கிறார் என்றார்.