2-ம் கட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது. புதிதாக விண்ணப்பித்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை நாளை முதல் தெரிந்து கொள்ளலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், ‘2-ம் கட்டமாக இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட உள்ளது. இதில் புதிய வாக்காளர் படங்கள் அதில் இடம்பெறும். அவர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் தேர்தல் ஆணையம் அனுமதித்த அடையாள அட்டையைக் காண்பித்து ஓட்டு போட முடியும். சென்னையில் 38 லட்சத்து 18 ஆயிரத்து 919 வாக்காளர்கள் உள்ள நிலையில் இன்று பட்டியல் வெளியான பிறகு வாக்காளர்கள் எண்ணிக்கை 75 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.