சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது ‘லீக்‘ ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னை ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
சென்னை அணியின் பலமே கேப்டன் டோனிதான். கேப்டன் பதவியிலும், பேட்டிங்கிலும் அவர் சிறப்பாக ஆல்ரவுண்டர் வரிசையில் இருக்கிறார். வாட்சன், பிராவோ, ஜடேஜா ஜோலிக்க கூடியவர்கள் பேட்டிங்கில் ரெய்னா, அம்பதிராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோரும் பந்து வீச்சில் இம்ரான்தாகீர், ஹர்பஜன்சிங் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் 2 ஆட்டத்திலும் சிறப்பாக ஆடியே தோற்றது. தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் 14 ரன்னில் தோற்று நேற்றைய ஆட்டத்தில் 198 ரன் குவித்தும் ஐதராபாத்திடம் 5 விக்கெட்டில் தோற்றது.