சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் இன்று அமேசானில் விற்பனைக்கு வருகிறது.
சாம்சங் நிறுவனத்தின் எம் சீரிஸ் போன்களில் மூன்றாவது மாடலான சாம்சங் கேலக்ஸி எம்30 போன்கள் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியானது. சாம்சங் மற்றும் அமேசானில் மட்டுமே சாம்சங் கேலக்ஸி எம் 30 கிடைக்கிறது. ஆனால், குறிப்பிட்ட தினங்கள் மட்டுமே விற்பனை அறிவிக்கப்பட்டதால், இதற்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. ரெட்மி நோட் 7 ப்ரோ -வுக்குப் போட்டியாக சாம்சங் இருப்பதால், சாம்சங் வாடிக்கையாளர்கள் இதனை பெரிதும் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் ஆன்லைன் சேல் தொடங்கியதும், சிறிது நேரத்திலேயே சாம்சங் எம் 30 விற்று தீர்ந்து விடுகிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று மதியம் 12 மணிக்கு சாம்சங் எம் 30 ஸ்மார்ட்போன் மீண்டும் விற்பனைக்கு வருகிறது. இதனை அமேசான் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.