spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்திக.,வீரமணி மீது தேர்தல் ஆணையமும் காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராம.கோபாலன்

திக.,வீரமணி மீது தேர்தல் ஆணையமும் காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராம.கோபாலன்

- Advertisement -

தேர்தல் கமிஷனும், காவல்துறையும் திராவிட கழக கி. வீரமணியின் அடாவடி பேச்சை வேடிக்கை பார்க்கலாமா? நடவடிக்கை எடுக்க வேண்டாமா? என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

நேற்று (4.4.2019) திருச்சி கீரைக்கடை பகுதியில் திருச்சி பாராளுமன்றம் திமுக கூட்டணியை ஆதரித்து, திராவிட கழக நடத்திய பொதுக்கூட்டத்தில் தி.க.வின் பொறுப்பாளர் அன்புக்கரசு, அந்த அமைப்பின் தலைவர் கீ. வீரமணி, திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் ஆகியோர் இந்து தெய்வமான கிருஷ்ணரை அவதூறாக, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தோட சம்பந்தப்படுத்தி, பக்தர்களின் மனங்கள் புண்படும்படி பேசியதை அடுத்து, இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக திரண்டு, ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதனை பொறுக்கமுடியாமல், திராவிட கழகத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். காவல்துறை வேடிக்கை பார்த்ததோடு, வழக்கும்போல் இரு தரப்பிலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது.

திராவிட கழக வீரமணி இரு வாரங்களுக்கு முன்னர், சென்னையில் அவரது அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் இதே போன்று பேசினார். அது சமூக வளைதளங்களிலும், தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் வெளியானதை அடுத்து, இந்து முன்னணி சார்பில் தமிழகத்தில் பல காவல்துறை அலுவலகங்களிலும் புகார் மனு கொடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. ஆனால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே, முகமது நபியை பற்றி இணையதளத்தில் வந்த செய்தியை பகிரப்பட்டபோது, பாய்ந்து வந்து இதே காவல்துறை வழக்கு பதிவு செய்து கல்யாணராமன் என்பவரை சிறையில் அடைத்தது. ஆனால், திராவிட கழகத்தின் தலைவர் பேசியதற்கு எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. இப்படி காவல்துறை பாரபட்சமாக நடப்பது வெட்கக்கேடானது.

தேர்தல் நடத்தை விதிமுறையில் தெளிவாக, மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதும், புண்படுத்தி பேசுவதும் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும்போது, ஏன் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்கவும், இதுபோல் தொடர்ந்து பேசி வரும் திராவிட கழகத்திற்கு அனுமதியும் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அனுமதி வழங்குகிறார்கள்? என்பது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், திமுகவின் தலைவர் ஸ்டாலின், தங்கள் கட்சி எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என்று பேசினார். அதனை அக்கட்சியின் தலைவர்கள் பலரும் தேர்தல் பரப்புரையில் பேசினர். ஆனால், திராவிட முன்னேற்றக்கழகம் திருந்தாத கட்சி. திராவிட கழகத்திற்கு மேடை அமைத்து, இந்து தெய்வங்களை, நம்பிக்கைகளை கொச்சை படுத்துவதை வேடிக்கை பார்க்கும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கு, இந்துக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்துக்கள் விழிப்படைந்துவிட்டார்கள். இவர்களின் கேவல புத்திக்கு தேர்தலில்தான் தகுந்த பாடம் புகட்டவேண்டும். அரசியல்வாதிகளுக்கு ஓட்டு எனும் ஆயுதத்தால் தண்டிக்கும் போதுதான், இனி ஒரு காலமும் இந்துக்களின் நம்பிக்கைகளை, தெய்வங்களை கொச்சை படுத்தும் துணிவு வராது.

எனவே, திமுக கூட்டணியில் இருக்கும் தன்மானமுள்ள, சுயமரியாதை உள்ள, தெய்வ நம்பிக்கை உள்ள இந்துக்கள் அக்கட்சியின் தலைவர்களுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தங்கள் மதத்தை குறித்து தவறான கருத்து தெரிவித்தால், அந்த கட்சியின் தலைமைக்கு எதிராக குரல் கொடுக்கவும் தயங்குவதில்லை. இந்துக்கள் அடிமைகளோ, சூடு சொரணை அற்றவர்களோ அல்ல என்பதை இந்த தேர்தல் நேரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியில் உள்ள இந்துக்களும், அவர்தம் குடும்பத்தாரும், தெய்வ நம்பிக்கை உள்ளவர்களும் இதனைக் கண்டிக்க முன்வரவேண்டும்.

எனவே, வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுகவின் கூட்டணிக்கு இந்துக்கள் ஓட்டு எனும் சக்தியால் புத்தி புகட்டுவோம். தேர்தல் சுமுகமாக, அமைதியாக நடைபெறுதை சீர்குலைக்கவே திக, திமுக கூட்டு சதி செய்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. இந்து தெய்வமான கிருஷ்ண பரமாத்வாவை கேவலப்படுத்தி பேசிய வீரமணி கும்பல் மீது தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அந்த அமைப்பின் தேர்தல் பரப்புரைக்கு உடனடியாக முற்றிலுமாக தடை விதிக்கவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe