அட்சய திருதியை நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 குறைவு

சென்னை: அட்சய திருதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு, ரூ. 136 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 17 குறைந்து ரூ. 2,526க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ. 136 குறைந்து ரூ. 20,208க்கும் விற்கப்படுகிறது. சில்லரை வெள்ளி கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூ. 39.00 என்ற அளவிலும், பார் வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 550 குறைந்து ரூ. 36,420 என்ற அளவிலும் விற்பனை ஆனது.