மக்களவை தேர்தலை முன்னிட்டி தமிழகம் ழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 47கோடி ரூபாய் பணமும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 94 கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட 160 மத்திய தொழில் பாதுகாப்புப் படை பிரிவுகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாகவு ஏற்கெனவே 10 தொழில் பாதுகாப்புப் படை பிரிவுகள் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களை எந்தெந்த தொகுதிகளுக்கு எத்தனை பேரை நியமிப்பது என்பது குறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவித்த அவர், சென்ற மக்களவை தேர்தலை காட்டிலும் 20 படை பிரிவுகள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மக்களவை தேர்தலை முன்னிட்டி மாநிலம் முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 47கோடி ரூபாய் பணமும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நட்த்திய சோதனையின் 94 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்படுள்ளதாக தெரிவித்தார். மேலும் முறையான ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 520 கிலோ தங்கமும், 421 கிலோ வெள்ளியையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தார்.