லிட்டருக்கு ரூ.2: தனியார் பால் விலைக் குறைப்பு

dodla-milkசென்னை: தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பால் தேவையை கருத்தில் கொண்டு, தனியார் நிறுவன பால் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேவைப்படும் 1 கோடியே 50 லட்சம் லிட்டர் பாலில், தனியார் பால் நிறுவனங்களே 1 கோடியே 25 லட்சம் லிட்டர் பால் தேவையை பூர்த்தி செய்கிறது என்றும், கடந்த ஆண்டு ஒரு லிட்டர் பால் விலை ரூ.12 வரை உயர்ந்த நிலையில், தற்போது தனியார் நிறுவனமான டோட்லா, பால் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிற தனியார் பால் நிறுவனங்களும் விலையைக் குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.