மக்களவைத் தே்ாதல் தேதி நெருங்கி வரும் நிலையில் பிரதமா் நரேந்திர மோடி இன்று கோவையில் நடைபெறும் பாஜக பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
தமிழகத்தில் மக்களவை, 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தே்ாதல் வருகின்ற 18ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு 10 நாட்களே உள்ள நிலையில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் தோ்தல் பரப்புரை பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில், பிரதமா் மோடி, காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி இருவரும் ஏற்கனவே தங்களது முதல்கட்ட பிரசாரத்தை முடித்துவிட்டனா். இதனிடையே பிரதமா் நரேந்திர மோடி அடுத்தக்கட்ட பிரசாரத்திற்காக இன்று தமிழகம் வர உள்ளார்.
கோவையில் இன்று இரவு 7.45 மணிக்கு நடைபெறும் பாஜக பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமா் மோடி அக்கட்சி வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.