மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் வெளியிடப்படுகிறது. www.dge.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தமிழகம் முழுவதும் உதவித்தொகை வழங்குவதற்காக தேசிய திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்திற்குள் உள்ள 8ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத முடியும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒவ்வொரு மாதமும் ரூ.500 உதவித்தொகையாக வழங்கப்படும். இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.