தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருப்பவர்களை தொடர்ந்து அனுமதித்தால், இரண்டு தலைமுறைக்கு ஒரு பயனும் இல்லாமல் செய்துவிடுவார்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சேலம் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் பிரபு மணிகண்டனை ஆதரித்து சூரமங்கலம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் எங்கும் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும், குடிநீருக்காக 7 கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டியுள்ளதாக தெரிவித்தார். ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டிய கமல், வரும் தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.