ஐபிஎல்: 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வெற்றி

ipl

சென்னை – கொல்கத்தா அணிகள் இடையே சென்னையில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 108 ரன்கள் எடுத்தது. 109 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 17.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்களை மட்டுமே இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. ஐபிஎல்லில் வரும் 12ம் தேதி இரவு 8 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் கொல்கத்தா அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோத உள்ளது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.