ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி விதிமுறைகளை மீறியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஜெய்பூரில் நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 154 ரன்கள் எடுத்தது.
வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடிய போது கடைசி ஓவரில் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்து சென்னை அணியின் சட்னரின் இடுப்புக்கு மேலே பந்து செல்லும்படி பவுளிங் செய்தார். இதை ஒரு நடுவர் நோ-பால் என்று அறிவித்தார்.
ஆனால் இதனை மற்றொரு நடுவர் மறுத்ததால் பொறுமையை இழந்து ஆடுகளத்திற்குள் சென்று நடுவர்களிடம் தோனி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஐபிஎல் விதிமுறைகளின் படி விக்கெட்டை இழந்த ஒரு வீரர் போட்டி நடக்கும் போது மீண்டும் ஆடுகளத்திற்குள் செல்வது தவறாகும். எனவே விதிமுறையை மீறிய தோனிக்கு அவரின் ஒரு போட்டிக்கான சம்பளத்தில் பாதியை அபராதமாக விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.