கிருஷ்ணகிரியில் பொது கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார். தமிழக கலாச்சாரம் , பண்பாடு உள்ளிட்டவை குறித்து பிரதமர் ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். தமிழக மக்களை அன்பால் மட்டுமே வெல்ல வேண்டும் , வெறுப்பால் அல்ல. பல்வேறு கலாச்சாரம் , சிந்தனை கொண்டது தான் நம் நாடு என்பதை பிரதமர் மோடி உணரவில்லை. பிரதமர் மோடி 15 பேருக்காக மட்டுமே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி இருக்கும் வரை தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எத்தனை பேரின் வங்கி கணக்கில் ரூபாய் 15 லட்சம் சேர்ந்தது என்று பிரதமர் மோடி விளக்க வேண்டும். ஏழைகள் வறுமையில் இருந்து விடுபட எவ்வளவு பணம் தந்தால் நன்றாக இருக்கும் என யோசித்தேன் , நாட்டின் பொருளாதாரத்தை அழிக்காமல் ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நினைத்தேன் . வறுமையை ஒழிக்க ஆண்டுக்கு 72 ஆயிரம் வழங்க தீர்மானித்தோம். இந்தியா என்பது அனைத்து ஒட்டுமொத்த உருவாக்கம். பாஜக அரசு விவசாயிகளுக்கான பல திட்டங்களை முடக்கி விட்டது. விவசாயப் பொருட்களுக்கான விலை , ஊக்கத் தொகையை முன்கூட்டியே அறிவிப்போம். ரயில்வே பட்ஜெட்டை பாஜக அரசு நிறுத்திவிட்டது. நீரவ் மோடிக்கு 35 ஆயிரம் கோடியையும் , விஜய் மல்லையாவுக்கு 10,000 கோடியையும் கொடுத்து விட்டது மோடி அரசு என்றார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari