நாமக்கல் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், கொ.ம.தே.க., வேட்பாளர் சின்ராஜ், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இன்று மாலை 5:00 மணிக்கு, நாமக்கல்-சேலம் சாலை, பொம்மக்குட்டைமேடு லட்சுமி திருமண மண்டபத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஊராட்சி மற்றும் வார்டு செயலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari